கேரியர்கள்Blog
உள்நுழைவு/பதிவு செய்க

இந்தியா போஸ்ட்  கண்காணிப்பு

AgogoPost
2022/02/16
Courier News & Updates
LinkedIn
Whatsapp

இந்தியா போஸ்ட் நிலையை கண்காணிப்பதற்கான படிகள்

AgogoPost கண்காணிப்பு என்பது பொதிகளை கண்காணிப்பதற்கு வழங்கப்படும் ஒரு கருவியாகும்.  கீழ்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் பொதியை நீங்கள் கண்காணிக்கலாம்.

·         உங்கள் ரசீதில் இருக்கும் கண்காணிப்பு இலக்கத்தை சரிபார்க்கவும்.

·         AgogoPost.com  என்ற தளத்தில் உள்நுழையுங்கள்

·         Text fieldல் கண்காணிப்பு இலக்கத்தை உள்ளிடவும்.

·         "Track" என்ற பொத்தானை அழுத்துங்கள்.


அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்.

இந்தியா போஸ்ட் மற்றும் இந்திய போஸ்ட் கண்காணிப்பு சேவை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும் கீழே உள்ளன.


பொதிகளை ஒப்படைப்பதற்கு இந்தியா போஸ்ட் எவ்வளவு காலம் எடுக்கும்?

ஒரு இந்தியா போஸ்ட் ஆர்டர், பொதிகளை ஒப்படைக்க எடுக்கும் நேரத்தின் அளவானது உங்கள் பொதியின் அளவு, எடை, சேருமிடம் மற்றும் நீங்கள் தெரிவு செய்யும் கப்பல் போக்குவரத்து (ஷிப்பிங்) முறையை பொறுத்தது. இருப்பினும், ஸ்பீட் போஸ்ட்டைப் (speed post) பயன்படுத்தி இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சராசரியாக டெலிவரி நாட்கள் (இந்தியா போஸ்டில் காணப்படும் உயர்மதிப்பு மிக்க வேகமான ஒப்படைப்பு முறை மூலம்) 12 முதல் 20 நாட்கள் வரை ஆகலாம். நிலையான அஞ்சல் விருப்பத்தைத் (standard post option) நீங்கள் தெரிவுசெய்திருப்பின் பொதுவாக 30 முதல் 40 நாட்கள் வரை அதிக நாட்கள் எடுக்கும். பதிவுசெய்யப்பட்ட அனைத்து அஞ்சல்களையும் Ship24 இன் உலகலாவிய ஏற்றுமதி கண்காணிப்பு இணையத்தளத்தினூடாக இந்தியா போஸ்ட் கண்காணிப்பு இலக்கத்தை பயன்படுத்தி கண்காணிக்க முடியும். அந்த இலக்கமானது இந்தியா போஸ்ட் உங்கள் பொதியை கப்பல் போக்குவரத்துக்காக கையளிக்கும் போது அவர்கள் தரும் கண்காணிப்பு இலக்கமாகும். 

எனது இந்திய போஸ்ட் கண்காணிப்பு இலக்கம் எப்படி இருக்கும்?

ஸ்பீட் போஸ்ட்(speed post)  டெலிவரி முறை மூலம் அனுப்பப்படும் பொதிகளுக்கான இலக்கங்கள் பெரும்பாலும் E ல் ஆரம்பமாகும். அதேசமயம் நிலையான (standard) டெலிவரிக்கு (பதிவு செய்யப்பட்டிருப்பின்) இது பொதுவாக R அல்லது C ல் ஆரம்பமாகும். இந்தியா போஸ்ட் கண்காணிப்பு இலக்கங்களுக்கான வெவ்வேறு உதாரணங்களை கீழே காணலாம்:

·         வேக அஞ்சல்(Speed Post) உள்நாடு: EE097456789IN

·         பதிவுசெய்யப்பட்ட அஞ்சல்: RX987654321IN

 

இந்தியா போஸ்ட் இணையவழி கொள்வனவுகளை வழங்குகிறதா?

அமேசான் (Amazon) போன்ற இணையவழி இணையதளங்கள் மற்றும் சந்தை தளங்கள் ஊடாக இந்தியாவிற்குள் ஆர்டர் செய்யப்பட்ட அல்லது இந்தியாவில் டெலிவரி செய்யப்பட இருப்பவைகள்  இந்தியா போஸ்ட் மூலமாக கையாளப்படலாம். உங்கள் இணையத்தின் மூலமான கொள்வனவுகளை கண்காணிக்க, இந்தியா போஸ்ட்டால் உங்கள் பொதி கையளிக்கப்படும் போது உங்கள் பொதியின் தற்போதைய நிலையை உடனுக்குடன் அறிந்து வைத்திருக்க, உலகளாவிய கண்காணிப்பு தளமான AgogoPost ஐ தெ ரிவு செய்யுங்கள்.

 

இந்தியா போஸ்ட் சர்வதேச அளவில் பொதிகளை ஒப்படைக்குமா?

ஆம்.  உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு இந்தியா போஸ்ட் டெலிவரி செய்கிறது, இருப்பினும், உங்கள் பொதியை அனுப்ப முன்னர் நீங்கள் சேவையைச் பரிசீலனை செய்ய வேண்டும்.  குறிப்பாக தொலைதூரப் பகுதிக்கு அனுப்புவதாக இருந்தால் டெலிவரி செய்ய முடியாமல் போகலாம் அல்லது உங்கள் பொதிக்காக மேலதிக கட்டணங்கள் மற்றும் நீடிக்கப்பட்ட டெலிவரி நாட்கள் வழங்கப்படலாம். இந்தியா போஸ்ட் சர்வதேச டெலிவரி சேவைகளை வழங்குகின்ற போதிலும் உங்கள் பார்சல் இந்தியாவை விட்டு செல்லும் போது  குறிப்பாக அது மற்றொரு நாட்டிற்கு வரும்போது பெரும்பாலும் மற்றொரு கூரியர் அல்லது அஞ்சல் சேவையால் எடுத்துக்கொள்ளப்படும்.

இந்தியா போஸ்ட் வாடிக்கையாளர் சேவையை எவ்வாறு தொடர்பு கொள்வது?

எப்போதாவது ஒருமுறை, உங்கள் பொதி சென்றடைய நம்பமுடியாதளவு மிக நீண்ட நாட்கள் எடுக்கலாம். குறிப்பாக இடைநடுவில் ஏற்படும் தவிர்க்க முடியாக காரணங்களினாலோ அல்லது உங்கள் பொதி இந்தியாவின் மிகத் தொலைதூரப் பகுதியை நோக்கிச் சென்றாலோ நீண்ட நாட்கள் எடுக்கலாம். அவ்வாறான சந்தர்பங்களில் நீங்கள் இந்தியா போஸ்ட்டைத் தொடர்பு கொள்ள விரும்பினால், கீழ் குறிப்பிட்டவாறு தொடர்பு கொள்ள முடியும்.

·         தொலைபேசி மூலம் இலவச அழைப்பை ஏற்படுத்துங்கள் +91 1800 266 6868.

·         அல்லது அஞ்சல் அனுப்புங்கள் : Postal Directorate . Dak Bhavan , New Delhi 110116.